பிக்சாண்டார்கோயிலில் குடும்பத் தகராறில் கணவன் தூக்கு மாட்டி தற்கொலை

0 360
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோவில் ஊராட்சியை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் 53 வயதான சம்பத். இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.இவருக்கு குடி பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மீண்டும் கணவன் மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது .பின்னர் அறையில் நுழைந்து கதவை சாத்திக் கொண்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.நீண்ட நேரம் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அவருடைய மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.