அம்பேத்கர் குறித்து கவிதை வெளியிட்ட பள்ளி மாணவிக்கு பரிசு வழங்கி பாராட்டு
சங்கரன்கோவிலில் அம்பேத்காரின் 131 வது பிறந்த நாளை முன்னிட்டு நூல் வெளியீட்டு விழாவில் நேற்று பரிசு பெற்ற சமயபுரம் பள்ளி மாணவி.
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள பள்ளி மாணவி யாழினி நம்பர் 1 டோல்கேட் அருகே கூத்தூர் ஊராட்சியில் உள்ள ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் கவிதை போட்டி,பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, பட்டிமன்றம் உள்ளிட்டவைகளை பங்குபெற்று 200 க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் பரிசுகள் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் டாக்டர் அம்பேத்கார் குறித்து கவிதை ஒன்றை எழுதி இருந்தார். அந்த கவிதை நதிகளில் தவழ்ந்த கவிதை புத்தகத்தில் இடம்பெற்றது. இந்நிலையில் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நதிகள் அறக்கட்டளை சார்பில் சட்டமேதை டாக்டர் அம்பேத்காரின் 131 வது பிறந்தநாளை முன்னிட்டு நதிகளில் தவழ்ந்த கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சமயபுரத்தைச் சேர்ந்த 9 ம் வகுப்பு பள்ளி மாணவி யாழினிக்கு சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா சான்றிதழ் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.