டாப் 10 தலைவர் தமிழ்மாமணி விருது பெற்ற கல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர்

0 693
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கல் பாளையத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் எம்.ஆர்.வி பாஸ்கர் சிறந்த ஊராட்சி தலைவர்களுக்கான இரண்டாம் இளங்கோ டாப்-10 தலைவர் தமிழ்மாமணி விருது பெற்றார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முத்தமிழ் கலை சங்க அறக்கட்டளை சார்பில் நாமக்கல் கவிஞர் டாக்டர் இரண்டாம் இளங்கோவின் தமிழ்மாமணி விருது சிறந்த ஊராட்சிமன்ற தலைவர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மனச்சநல்லூர் அருகே கல்பாளையத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் எம் ஆர் வி பாஸ்கர் சிறப்பாக பணியாற்றியதற்காக சிறந்த மாமனிதர் மற்றும் சிறந்த ஊராட்சி மன்ற தலைவருக்கான இரண்டாம் இளங்கோ தமிழ்மாமணி விருது வழங்கி பாராட்டினார். மேலும் விருதுபெற்ற ஊராட்சி மன்ற தலைவர் எம் ஆர் வி பாஸ்கருக்கு கல்பாளையம் மற்றும் மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த பிரதிநிதிகள் மேலும் பணி சிறக்க வாழ்த்தினர்.

Leave A Reply

Your email address will not be published.