கத்தியால் குத்தப்பட்ட காயத்துடன் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்த வாலிபர்

0 718
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை கோவிந்தராஜபுரத்தைச் சேர்ந்தவர் லட்சுமிநாராயணன் (வயது 31) கார் ஓட்டுனர். இரவு வீட்டின் ஒரு அறையில் படுத்து தூங்கிய இவரை இன்று காலை அவரது அண்ணன் சீனிவாசன் என்பவர்  உணவு சாப்பிடுவதற்காக எழுப்ப சென்றபோது லட்சுமிநாராயணன்  தொண்டை பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.

108 மூலம் மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.  பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து தகவலறிந்த மணப்பாறை காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகிறார்கள். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் வாலிபர் மர்மமான முறையில்  கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.