குறுங்காடு உருவாக்கிடும் வகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு,காலை 9 மணியளவில் திருச்சி குழுமணிசாலை வின்ஸ் அன்பு அவென்யூவில் மியாவாக்கி குறுங்காடு உருவாக்கிடும் வகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் பங்கேற்று மரக்கன்றுளை நட்டுவைத்தனர்.