திருடப்பட்ட வைக்கோல் இயந்திரத்தை தானே மீட்ட விவசாயி: குற்றவாளிகளுக்கு துணைபோன சமயபுரம் போலீஸ்

0 413
Stalin trichy visit

திருச்சி மேலவாளாடி பகுதியைச் சேர்ந்தவர் பவுலின்சவரிராஜ் மகன் சுரேஷ்அந்தோனிராஜ்(47). இவர் விவசாயம் பார்த்து வருகிறார். இவர் கடந்த வருடம் ரூ.2.45லட்சம் செலவில் வைக்கோல் கட்டும் பேலர் மிஷன் வாங்கி வைக்கோல் கட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி இரவு வைக்கோல் பேலர் மிஷினை தனது வீட்டின் முன்பு டிராக்டருடன் இணைத்து நிறுத்திவிட்டு உறங்கச் சென்றார். பின்னர் 9ம் தேித அதிகாலையில் எழுந்து பார்த்த போது தனது வைக்கோல் பேலர் மிஷினை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது.
இதையடுத்து அன்றைய தினமே சுரேஷ் அந்தோனிராஜ் சமயபுரம் போலீசில் புகார் அளித்தார். எஸ்.ஐ தினேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதற்கிடையில் சுரேஷ்அந்தோனிராஜ் அருகில் அகிலாண்டபுரத்தில் உள்ள நண்பர் வீட்டில் சாலையை நோக்கி பொறுத்தப்பட்டிருந்த கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அதில் ஒரு ஆட்டோவில் வைத்து வைக்கோல் இயந்திரத்தை கட்டி இழுத்து சென்றது தெரிந்தது. இதனையும் காவல் நிலையத்தில் அளித்தார்.
இந்நிலையில் கடந்த 12ம் தேதி துறையூர் செங்காட்டுப்பட்டியில் எதேச்சையாக ஒருவர் வைக்கோல் கட்டும் இயந்திரம் வாங்குவதற்கு சென்றபோது, அவர்கள் சமயபுரத்தில் இருந்து வாங்கி வந்ததாக கூறி முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னதால் சந்தேகப்பட்டு, சுரேஷ் அந்தோனிராஜ்க்கு அவரது நண்பர்கள் மூலம் தகவல் தந்தனர். அதன்பேரில் நண்பர்களுடன் செங்காட்டுப்பட்டி சென்று பார்த்தபோது, அது தனது வைக்கோல் இயந்திரம் என்பதை உறுதி செய்த சுரேஷ் அந்தோனிராஜ், சமயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் இயந்திரத்தை மீட்டனர். மேலும் செங்காட்டுப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ், மாந்துரை அடுத்த பம்பரம்சுற்றி பகுதியைச் சேர்ந்த கார்த்தி ஆகியோரை பிடித்து காவல்நிலையம் அழைத்து விசாரணை செய்தனர். ஆனால் அவர்களை கைது செய்யாமல், இரவில் தங்க வைக்கக் கூடாது, மறுநாள் அழைத்து கைது செய்யலாம் என தெரிவித்து, அன்று மாலை வீட்டிற்கு இரு குற்றவாளிகளையும் அனுப்பி விட்டனர். இந்நிலையில் மீட்கப்பட்ட வைக்கோல் இயந்திரத்தை விவசாயிடம் ஒப்படைக்காமல் காவல்நிலையத்திலேயே எஸ்ஐ நிறுத்தசொல்லிவிட்டார். மேலும் இது தொடர்பாக மேல்நடவடிக்கை வேண்டாம் எனவும் புகார் தாரரிடம் எழுதி வாக்கிக்கொண்டார். ஆனால் வைக்கோல் இயந்திரத்தை திருப்பிதரரும் இல்லை. குற்றவாளிகளை கைது செய்யவம் இல்லை. இதனால் இன்றுவரை குற்றவாளிகளை தானே கண்டுபிடித்த விவசாயி, வைக்கோல் இயந்திரத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு, ஏண்டா புகார் கொடுத்தோம் என எண்ணி தினம் தினம், இயந்திரத்தை காவல் நிலையத்தில் இருந்து மீட்க போராடி வருகிறார். இதனால் இயந்திரத்தை மீட்க கோர்ட்டில் அந்த விவசாயி வழக்கறிஞர் மூலம் ரெக்கவரி பைல் செய்திருக்கிறார்.
குற்றவாளியை விவசாயியே கண்டுபிடித்து கொடுத்தும், அவர்களை கைது செய்யாமல் விட்டுவிட்டு, புகார்தாரரின் வயிற்றுப்பிழைப்பு இயந்திரத்தை சமயபுரம் காவல் நிலையத்தில் வைத்து அழைகழிப்பு செய்வதாக வேதனையோடு தெரிவித்து மாவட்ட காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எனது நீதி வழங்கிட வேண்டும் என வேண்டுகோள் வைத்து புலம்பிவருகிறார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.