அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனரை தாக்கி பக்கவாட்டு கண்ணாடி உடைத்தவர் கைது
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூர் பெட்ரோல் பங்க் அருகே திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் அரசு பேருந்தை மறித்து ஓட்டுனர் நடத்துனரை தாக்கி பேருந்தில் பக்கவாட்டில் இருந்த அவசர வழி கண்ணாடியை உடைத்த நபர் கைது.மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி சிறுகனூர் அருகே பீகாரை சேர்ந்தவர் 42 வயதான மணிவேல் இவர் அரசு பேருந்து கழகத்தில் நடத்துனராக வேலை செய்து வருகிறார் அதேபோல் திருச்சி திருவளர்சோலை பாரதி நகரை சேர்ந்தவர் 48 வயதான செந்தில்குமார் இவர் அரசு பேருந்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார் இந்நிலையில் நேற்று
சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.அப்போது வாத்தலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சிறுகாம்பூர் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது இரண்டு பைக்கில் வந்த நான்கு நபர்கள் பேருந்தை மறித்து ஓட்டுநர் நடத்துனரை தாக்கிவிட்டு பக கவாட்டில் இருந்த அவசரவழி கண்ணாடியை உடைத்தனர். இதில் ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். அப்போது கண்ணாடியை உடைத்ததில் ஸ்ரீரங்கம் கீழவாசல் டிரைனேஜ் தெருவைச் சேர்ந்து மணி மகன் 28 வயதான பிரசாத் கையில் காயம் ஏற்பட்டு சிறுகாம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் திருச்சி சேலம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது எங்களது பைக்கை அணைத்துவிட்டு சென்றதாக கூறியுள்ளனர்.பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த வாத்தலை போலீசார் பிரசாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்ற மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.