திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே போதாவூர் என்ற கிராமத்தை சேர்ந்த தம்பதியர்கள் முருகபாண்டியன்(32) – சரிதா(30), இவர்களுக்கு இரண்டரை வயதில் இனியா ஸ்ரீ என்ற பெண்ணும் கவிதா என்ற ஐந்து மாத பெண் குழந்தையும் இருந்தனர். இவர்கள் இருவருக்கும் சில நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது – கொத்தனாராக வேலை செய்யும் முருகபாண்டியன் குடித்துவிட்டு தன் மனைவியை அடித்து கொடுமைபடுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை கண்டித்து வந்த மனைவி சத்யா இன்று சுதந்திர தினத்தில் கூட மதுபான கடைகள் மூடி இருந்தநிலையிலும் குடித்துவிட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. இதில் ஆத்திரம் அடைந்த மனைவி சத்யா தனது இரண்டு பெண் குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு அருகிலிருந்த கிணற்றில் சென்று இரண்டு குழந்தைகளையும் கிணற்றில் வீசி தானும் கிணற்றுக்குள் குதித்து உள்ளார். இதில் கிணற்றுக்குள் வீசப்பட்ட இரண்டு பெண் குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேலும் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த சத்யாவின் குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். குடிப்பழக்கம் காரணமாக இரண்டு பெண் குழந்தைகளையும் கிணற்றில் வீசிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறியhttps://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo