சிறுவர்களுக்கு உண்டியல் – திருச்சியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்!

0 514
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பாலையூர் கிராமத்தில் இன்று 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு திருச்சி எம்பவர் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இந்த நிகழ்வில் குழந்தைகளுக்கு சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக உண்டியல்கள் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் கிராமத்து திமுக கிளைச் செயலாளர் எஸ்.அமுதன், திமுக இளைஞரணி தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர் பால்ராஜ், செயலாளர் அரவிந்தன், துணைத் தலைவர் அருண் பாண்டியன் மற்றும் ஊர் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA

 

Leave A Reply

Your email address will not be published.