சுந்தரமூர்த்திநாயனார் மடாலயத்தில் 91வது குருபூஜை விழா

0 345
Stalin trichy visit

தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் கிராமத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்திநாயனார் குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி 91வது ஆண்டான இந்த ஆண்டு அரசின் விதிமுறைகளின்படி பாலசமுத்திரம் பகவதிஅம்மன் கோவில் அருகில் உள்ள சுந்தரமூர்த்திநாயனார் மடாலயத்தில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது.

இந்த குரு பூஜை மகேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. பின்னர் தொட்டியம் திருவாசகமாமணி புலவர் இரா.சுப்பிரமணியன் குழுவில் உள்ள சிவனடியார்கள் தேவார பாடல்களை இசையுடன் பாடினர். பின்னர் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மகா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சுந்தர மூர்த்தி நாயனாரின் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.