சைகை மொழியில் தேசிய கீதம் – திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி சுதந்திர தின கொண்டாட்டம்!
நாடு முழுவதும் நேற்று 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்லூரியின் என்.எஸ்.எஸ், என்.சி.சி மற்றும் விளையாட்டு பிரிவுகள் ஆகியோர் கலந்துகொண்டு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடினர்.இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக ஹோலி கிராஸ் கல்லூரி செயலாளர் Sr. ஆனி சேவியர் மற்றும் ஹோலி கிராஸ் கல்லூரியின் முதல்வர் Sr. கிறிஸ்டினா ப்ரிஜிட் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

மேலும் கல்லூரியின் மறுவாழ்வு அறிவியல் துறை சார்பாக இளைஞர்களின் பேச்சு மற்றும் காது குறைபாடுள்ள மாணவர்கள் சைகை மொழியில் தேசிய கீதம் பாடும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய….https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8