தேசிய கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் குழந்தை உரிமை விழிப்புணர்வு நிகழ்ச்சி

0 312
Stalin trichy visit

திருச்சி மாநகரம் தேசிய கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் குழந்தை உரிமை, பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் அவர்களின் தலைமையில் 22.07.22 நடைபெற்றது. குழந்தை நலக்குழு உறுப்பினர் பிரபு குழந்தை திருமண தடுப்பு சட்டம் 2006,பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012, குழந்தை தொழிலாளர் ஒழிப்புச் சட்டம் 1986 மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வழங்கினார். கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் லதா குழந்தை நலனில் காவல்துறையின் பங்கு மற்றும் கல்வியின் அவசியம்,காவலன் உதவி செயலி குறித்து பேசினார். சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், சைல்டு லைன் பணியாளர் ராபீன் ஆகியோர் குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1098, குழந்தை உரிமைகள் குறித்து பேசினார்கள்.

கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் கலைமதி, கற்பகம்,KLA குடும்ப நல ஆலோசகர் புளேரா ஆகியோர் குழந்தைகள் பாதுகாப்பில் குழந்தை நல காவல் அலுவலரின் பங்கு குறித்து பேசினார்கள். மாணவர்களுக்கு குழந்தைகள் மீதான வன்முறை குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.