இரண்டு லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம் மற்றும் பணத்தை கொள்ளை அடித்த நபர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்..
திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன் திருச்சி மாநகர காவல் ஆனையராக பொறுப்பேற்றது முதல் சரித்திர பதிவேடு குற்றவாளிகள், இருசக்கர வாகளத்தை திருடும் குற்றவாளிகள், வழிப்பறி செய்யும் குற்றவாளிகளை கண்டறிந்து, சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் மோசடி நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
கடந்த 09.06.22ம் தேதி அரசு மருத்துவமனை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட குழுமாயி கரையில் நின்றுக்கொண்டிருந்த நபரிடம் கத்தியை காண்பித்து பணம் ரூ.1500/ கொள்ளையடித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் எதிரி வெற்றிசெல்வம் வயது 27, த.பெ.கருப்பையா என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தும், எதிரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையில் எதிரி வெற்றிசெல்வம் என்பவர் குமரன் நகர் பகுதியில் இரண்டு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 2 லட்சம் மதிப்புள்ள இரண்டு இருசக்கர வாகனத்தை திருடியதை ஒப்புக்கொண்டும் அவரிடமிருந்து இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.
எனவே, எதிரி வெற்றிசெல்வம் என்பவர் தொடர்ந்து திருட்டு குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், ஆயுதங்களை கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி பணம் கொள்ளையடிப்பதும் வாடிக்கையாக கொண்டுள்ளவர் என விசாரணையில் தெரிய வருவதால், மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு அரசு மருத்துவமனை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், மேற்படி எதிரியை குனர்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி வெற்றிசெல்வம் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் .