ரூ 1 கோடி 53 லட்சம் மோசடி செய்த தனியார் வங்கி உதவி மேலாளர் உட்பட 3 நபர்கள் கைது

0 369
Stalin trichy visit

ரூ 1 கோடி 53 லட்சம் மோசடி செய்த தனியார் வங்கி உதவி மேலாளர் உட்பட 3 நபர்கள் கைது

கடந்த 16.12.21ந்தேதி ராம்குமார், 42/22, த/பெ.ராமநாதன் என்பவரின் குடும்பத்திற்கு சொந்தமாக தனியார் ஹோட்டலை தொழில் நஷ்டம் காரணமாக விற்பனை செய்ததாகவும், அதில் ரூபாய் 3 கோடி கிடைக்கப்பெற்ற பணத்தை திருச்சி பொன்னகர் தனியார் வங்கியில் (Fincare Small Finance Bank)-ன் உதவி மேலாளர் லெட்சுமிகாந்த், மேலாளர் சரவணன், உதவி மேலாளர் மோகன்ராஜ் (எ) மோகன்ராஜா ஆகியோர் மூலம் அவர்கள் பணிபுரியம் வங்கியில் 8 சதவீதம் வட்டி தருவதாக கூறிதன்பேரில், அம்மா லலிதா மற்றும் தம்பி அழகுராஜா ஆகியோர்கள் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்ததாகவும், இந்நிலையில் கடந்த 09.01.22ம்தேதி மேற்படி லட்சமிகாந்த் மற்றும் சிலர் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் வைத்து ஏல நகைகளை ஏலம் எடுத்து நமக்குள் முதலீடு செய்வோர்களின் முதலீடு தொகைக்கு ஏற்றவாறு 10 நாட்களில் லாபமாக வரும் என்று கூறி தனக்கும் எனது தம்பிக்கும் ஆசை வார்த்தை கூறியவர்களை நம்பி காசோலைகளில் கையெழுத்து மட்டும் இட்டு, தொகை, பெயர் மற்றும் தேதி ஆகியவற்றை குறிப்பிடாமல் மேற்படி லெட்சுமிகாந்திடம், 15 காசோலைகளை கொடுத்ததாகவும், மேற்கண்ட காசோலைகளை பயன்படுத்தி லெட்சுமிகாந்த் மற்றும் சிலர் பல பரிவர்த்தனை மேற்கொண்டு வங்கியில் தங்கள் கணக்கிலிருந்து ரூ.1,52,46,000/- மோசடி செய்துள்ளதாகவும், மேற்படி நபர்களால் மோசடி செய்யப்பட்டு, தாங்கள் இழந்த ரூ.1,52,46,000/- பணத்தை மீட்டு தரும்படி பெறப்பட்ட புகாரின்பேரில், அமர்வு நீதிமன்றம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில் துரித விசாரணைக்காக மாநகர குற்றப்பிரிவிற்கு (CCB) மாற்றம் செய்யப்பட்டு, வழக்கு விரைவாக விசாரணை செய்யப்பட்டு வழக்கின் எதிரிகள் 1)லெட்சுமிகாந்தன் 33/22 த.பெ.மாரிமுத்து 2)சுரேந்தர் 36/22 த.பெ.திருமலை 3)முருகன் த.பெ.பழனி ஆகியோர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட வழக்கில் சிறப்பாக பணியாற்றி துரிதமாக புலன்விசாரணை செய்து எதிரிகளை கைது செய்த காவல் உதவி ஆணையர் மாநகர குற்றப்பிரிவு, மாநகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் புலன்விசாரணையில் துணையாக இருந்த காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன்  பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.