திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூணாம்பாளையம் ஊராட்சியில் உள்ள கொராலிக்கொட்டத்தில் பேருந்து நிறுத்தம் பகுதியில் மோட்டார் பைக்கில் சென்ற ஆசிரியையிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்த சென்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் குமரகுடி பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவரது மனைவி 40 வயதான ராதா. இவர் திருவெள்ளறை அருகே உள்ள களவாய்ப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 20 ந்தேதி பள்ளி மாணவர்களை விளையாட்டு போட்டிக்காக மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். போட்டி முடிந்தவுடன் மாணவர்களை பேருந்தில் காளவாய்ப்பட்டிக்கு அனுப்பி விட்டு தனக்கு சொந்தமான மோட்டார் பைக்கில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பூனாம்பாளையம் அருகே கொராலிக்கொட்டம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது இரண்டு மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.இது குறித்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் சந்தேகத்திற்மான இருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் மண்ணச்சநல்லூர் அருகே சுனைபுகநல்லூர் கிழக்கு தெருவை சேர்ந்த ஜெகநாதன் மகன் 22 வயதான திலகன் என்ற மணி அவரது சிறை கூட்டாளியான புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கருவன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் முருகன் 19 வயதான முருகானந்தம் ஆகியோர் தங்க சங்கிலியை பறித்துச் சென்றது தெரியவந்தது.இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து மூன்றரை பவுன் தங்க சங்கிலி மற்றும் மோட்டார் பைக்கை பறிமுதல் செய்தனர்.பின்னர் நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.