குட்கா பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் – திருச்சி உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி!
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் இன்று துறையூர் நகர் பகுதியில் உள்ள 30க்கும் அதிகமான கடைகளில் ஆய்வு மேற்கொண்ட போது மனிகண்டன் என்பவரின் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் மனோகரன் வேறு எங்கும் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை வைத்துள்ளாரா? என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக அவரின் வீடு மற்றும் மற்ற இடங்களில் சோதனை செய்தபோது சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட பான்மசாலா,புகையிலை குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் 20 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து மாவட்ட அலுவலர் ரமேஷ்பாபு உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அந்த கடையை மூடி சீல் வைத்தனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo