சமயபுரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் திருமண ஜோடி!
சிவகாசியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகள் நிரஞ்சனாதேவி(21). என்ஜினீயரிங். இவரும் அதே பகுதியில் சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் என்ஜினீயரிங் படித்துள்ள தங்கப்பாண்டி மகன் மாரியப்பனும்(22) கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் எங்கே தங்கள் காதலை பெற்றோர்கள் பிரித்து விடுவார்களோ என்று அஞ்சிய நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் இருவரும் சமயபுரம் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர்கள் பெருமாள், ராஜசேகரன் ஆகியோர் இருவரது பெற்றோர்களுக்கும் தகவல் கொடுத்தனர். தகவலை அடுத்து மணமகனின் பெற்றோர் போலீஸ் நிலையம் வந்தனர். அவர்களிடம் போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.