லாரி மோதி இளைஞர் பலி

0 361
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இ வெள்ளனூர் பகுதியில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக்கில் சாலையை கடக்க முயன்றவர் மீது எதிரே வந்த லாரி மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் வந்தவர் படுகாயம் அடைந்தார்.

சமயபுரம் தேவிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் 37 வயதான மணிகண்டன். இவரும் லால்குடி அருகே இ வெள்ளனூர் இடக்கி மங்கலம் வடக்கு தெருவை சேர்ந்த 50 வயதான முத்துசாமி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அதேபோல் நாமக்கல் மாவட்டம் கலப்ப நாயக்கன்பட்டியைச் சேர்ந்த 48 வயதான ரவி அரியலூரில் இருந்து திருச்சி நோக்கி லாரியை ஓட்டி வந்தார்.அப்போது இ வெள்ளனூர் பகுதியில் சாலையை கடக்கும்போது எதிரே வந்த லாரி மோட்டார் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் இருவரும் படுகாயம் அடைந்து மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். முத்துசாமி படுகாயம் அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இத்திற்க்கு விரைந்து வந்து படுக்காயம் அடைந்த முத்துசாமியை விட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான மணிகண்டன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.