பெண் அதிகாரிக்கு மிரட்டல் : வனச்சரகர் மீது காவல்நிலையத்தில் புகார்
திருச்சி மாவட்ட வன அதிகாரியாக இருப்பவர் சுஜாதா. இவரது அலுவலகம் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் உள்ளது.துறையூர் வனச்சரகர் பொன்னுசாமி என்பவர் மாவட்ட வன அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அதிகாரி சுஜாதாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.இது தொடர்பாக செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பொன்னுசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.