வைகுந்த ஏகாதசி திருவிழா பகல் பத்து உற்சவத்தின் 4ஆம் திருநாள்

0 408
Stalin trichy visit

வைகுந்த ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து நான்காம் நாள் உற்சவத்தில் முத்து சாய கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள் – “ரங்க ராஜா – ரங்க பிரபு” என்கிற கோஷத்துடன் பெருமாளை தரிசனம் செய்த பக்தர்கள் …

அகண்ட காவிரியும் அதன் கரைகளை அழகு சேர்க்கும் ஸ்ரீரங்கம் நகரும் என்பது முதுமொழி – அத்தகைய சிறப்புகள் வாய்ந்த திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் பிரதான திருவிழாவான வைகுந்த ஏகாதசி பெருந்திருவிழாவின் நான்காம் நாள் பகல் பத்து உற்சவத்தில் நம்பெருமாள் முத்து சாய கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளினார்.

கடந்த வியாழக்கிழமை திருநெடுந்தாண்டதுடன் துவங்கிய வைகுந்த ஏகாதேசி பெருந்திருவிழாவில் பகல் பத்து நான்காம் நாள் உற்சவமான இன்று நம்பெருமாள் முத்து சாய கொண்டை – வைர அபயஹஸ்தம்,வைர பதக்கம்,முத்துச்சரம்,பவள மாலை,அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரனங்கள் சூடி காட்சி அளித்தார்.

மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டபோது – ரங்க ராஜா – ரங்க பிரபு – கோவிந்தா என்கிற பக்தர்கள் பக்தி பரவசத்தில் முழக்கம் இட ராஜநடை போட்டு ஆலயத்தின் உட்பிரகாரத்தில் வலம் வந்த ரங்கநாதர் பின்னர் அர்ஜுன மண்டபம் வந்தடைந்தார்.

நம்பெருமாள் புறப்பாடுடன் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை அருளிய பன்னிரு ஆழ்வார்களும் வலம் வந்து அர்ஜுன மண்டபம் அடைந்தனர் – நாள்தோறும் காலை 200 நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களும் மாலை 200 பாசுரங்களும் வேத விண்ணப்பகர்களால் இங்கு விண்ணப்பம் செய்யப்பட்டு வருகிறது.

வைகுந்த ஏகாதேசி பெருந்திருவிழாவை முன்னிட்டு மூலவர் முத்தாங்கி சேவையில் காட்சியளித்து வருவதால் ஸ்ரீரங்கத்தில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது – நாச்சியார் திருக்கோலம் என்கிற மோகனி அலங்காரம் வருகின்ற ஒன்றாம் தேதி காலையும்
முக்கிய திருவிழாவான வைகுந்த ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி அதிகாலையும்
நடைபெற உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.