பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி

0 527
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துறையில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக் மீது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.

லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள வாழக்கட்டையை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் 47 வயதான சந்திரசேகர். இவர் நேற்று இரவு தனது மோட்டார் பைக்கில் லால்குடியில் இருந்து தாளக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார். அதேபோல் லால்குடி அருகே மலையப்ப புரத்தைச் சேர்ந்த 48 வயதான கனகராஜ் நம்பர் 1 டோல்கேட்டில் இருந்து லால்குடி நோக்கி சரக்கு வாகனத்தில் எதிரே சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மாந்துறை அருகே தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதமாக மோட்டார் பைக் மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவவ இடத்திற்க்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.