வைகுந்த ஏகாதசி திருவிழா – பகல் பத்து ஒன்பதாம் திருநாள்
பூலோக வைகுந்தமான திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுந்த ஏகாதசி பெருந்திருவிழா – பகல் பத்து ஒன்பதாம் திரு நாள் உற்சவத்தில் நம்பெருமாள் உடை முழுவதும் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட முத்து குறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை – திருவரங்கணின் எழில் மிகு திருக்கோலத்தை காண்பதற்காக அதிகாலையே குவிந்த பக்தர்கள்.
வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கத்தில் இந்த ஆண்டு வைகுந்த ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு பெருந்திருவிழா கடந்த 22ம் தேதி துவங்கியது.
பகல் பத்து உற்சவத்தின் 9ம் நாளான இன்று நம்பெருமாள் உடல் முழுவதும் முத்துகளால் தைக்கபட்ட ஆடை அனிந்து முத்து குறி அலங்காரத்தில் எழுந்தருளினார்.
பகல் பத்து திருநாளில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் நம்பெருமாள் இன்று முத்து குறி அலங்காரத்தில் புறப்பட்டு அர்ஜுன மண்டபத்தில் காட்சியளிக்கிறார்.
முன்னதாக
மூலஸ்தானத்தில் இருந்து
நம்பெருமாள் புறப்பட்டபோது – ரங்க ராஜா – ரங்க பிரபு – கோவிந்தா என்கிற பக்தர்கள் பக்தி பரவசத்தில் முழக்கம் இட ராஜநடை போட்டு ஆலயத்தின் உட்பிரகாரத்தில் வலம் வந்த ரங்கநாதர் பின்னர் அர்ஜுன மண்டபம் வந்தடைந்தார்.
நம்பெருமாள் புறப்பாடுடன் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை அருளிய பன்னிரு ஆழ்வார்களும் வலம் வந்து அர்ஜுன மண்டபம் அடைந்தனர் – நாள்தோறும் காலை 200 நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களும் மாலை 200 பாசுரங்களும் வேத விண்ணப்பகர்களால் இங்கு விண்ணப்பம் செய்யப்பட்டு வருகிறது.
இதே போல் வைகுந்த ஏகாதேசி பெருந்திருவிழாவை முன்னிட்டு மூலவர் பெரிய பெருமாள் முத்தாங்கி சேவையில் காட்சியளித்து வருவதால் ஸ்ரீரங்கத்தில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது – பெருமாள் பெண்ணாக உருவெடுத்த நாச்சியார் திருக்கோலம் என்கிற மோகனி அலங்காரம் நாளை காலையும்
முக்கிய திருவிழாவான வைகுந்த ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி அதிகாலையும்
நடைபெற உள்ளது.