இருட்டில் இறுதிச் சடங்கு நடத்திய அருந்ததியர் சமுதாய மக்களின் அவலநிலை
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் இருட்டில் இறுதிச் சடங்கு நடத்தி நல்லடக்கம் செய்த அருந்ததியர் சமுதாய மக்களின் அவலநிலை.நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்.
புள்ளம்பாடி பேரூராட்சி 1 வது வார்டில் 200 மேற்பட்ட அருந்ததிய சமுதாய குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு மயானம் அமைக்க இடம் இல்லாததால் அருகாமையில் உள்ள வெங்கடாஜலபுரம் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட திருச்சி சிதம்பரம் சாலை மார்க்கம் கருங்கால் ஓடை ஒதுக்குப்புறமாக உள்ள இடத்தில் மயானம் அமைத்து சுமார் 52 ஆண்டுகளுக்கு மேலாக இருள் சூழ்ந்த பகுதிகளில் மின்விளக்கு இல்லாமல் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமலும் பயன்படுத்தி வருகிறார்கள் இது சம்பந்தமாக ஊராட்சி அலுவலகம் ,புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,வட்டாட்சியர் அலுவலகம் ,வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தமிழக முதலமைச்சர் அவர்களிடமும் மனு வழங்கிய இடத்தை வகை மாற்றம் செய்து வழங்கிட முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்திலும் இருந்து நகல் பெறப்பட்டன. ஒரு வருட காலத்திற்கு மேலாக இந்த பணிகள் நடைபெற்றது.ஆனால் இதுவரை எந்த நிர்வாகமும்,சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர மறுத்து காலம் தாழ்த்தி வருகிறது.நேற்று அருந்த்தியர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.மயானம் மற்றும் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருட்டில் அவருக்கு இறுதி சடங்கு நடத்தி நல்லடக்கம் செய்யப்பட்டது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் இருள் சூழ்ந்த பகுதியில் அருந்ததிய மக்கள் பயன்படுத்தி வரும் மயானத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து அருந்ததிய சமுதாய மக்களின் அவல நிலையை போக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.