பேருந்தில் பயணம் செய்த பள்ளி ஆசிரியையின் 5 பவுன் நகை மாயம்

0 368
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே  நம்பர் 1 டோல்கேட் அருகே அகிலாண்டபுரம் கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் தீபன் சக்ரவர்த்தி. இவரது மனைவி  பிரியா(28). இவர் உத்தமர் கோவில் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 10 ம் தேதி பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக்11 மணிக்கு அகிலாண்டபுரத்தில் இருந்து தனியார் பேருந்தில் ஏறி நம்பர் 1 டோல்கேட்டில் இறங்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து மற்றொரு பேருந்து மூலம் ஏறி உத்தமர் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி உள்ளார். அப்போது தான் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதிலிருந்த 5 பவுன் நகை மாயமாகி இருந்தது. பேருந்தில் சென்றபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நகையை திருடி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.