துக்க வீட்டில் 6½ பவுன் நகை திருட்டு : போலீசார் விசாரணை
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள நெய்குப்பை நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவருடைய மகன் மருமகள், லால்குடியில் வைத்து வருகின்றனர் இந்நிலையில் தனியாக இருந்த ஜெயலட்சுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த 53 வயதான சூரியகலா என்பவர் அருகில் இருந்து கவனித்து வந்ததாக கூற்படுகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஜெயலட்சுமி உடல்நிலை மோசமடையவே இதுகுறித்து சூரியகலா மருமகள் ஷாலினிக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் அவர்கள் வருவதற்குள் ஜெயலட்சுமி இறந்து விட்டார். இதையடுத்து அவரது மருமகள் ஷாலினி மற்றும் உறவினர்கள் அவருக்கு இறுதி சடங்குகளை செய்தனர். இதற்கிடையே துக்க வீட்டில், ஜெயலட்சுமி அணிந்திருந்த சுமார் 6½ பவுன் நகைகள் மாயமானதாக கூறப்படுகிறது. இது குறித்து ஷாலினி, தனது மாமியாரின் நகைகளை சூரியகலா திருடி இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளதாக சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரியகலாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.