உலக தண்ணீர் தினத்தையொட்டி விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு

0 339
Stalin trichy visit

கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியின் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் சார்பில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வாசகங்களுடன் உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்வில் கல்லூரியின் செயலர் தந்தை அருள்பணி. லூயிஸ் பிரிட்டோ தலைமையில் தண்ணீர் அமைப்பின் செயல்தலைவர் திரு.கே.சி.நீலமேகம், செயலாளர் பேரா.கி.சதீஷ் குமார், இணைச் செயலர் திரு.R.K.ராஜா, உள்ளிட்ட மூன்றாமாண்டு மற்றும் முதுகலை இசைத்துறை மாணவர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர்.

நிகழ்வில் நீர்நிலைகள் பாதுகாப்பு, நிலத்தடி நீர் சுரண்டல் குறைப்பு, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, நீர்நிலைகளை திறந்தவெளி குப்பைத் தொட்டியாய் மாற்றாமல் தடுத்துக் காத்தல், நெகிழி பயன்பாட்டை தவிர்த்தல், நீர் வாழ் உயிரினங்கள் பாதுகாத்தல், நிலத்தடி நீரின் மகத்துவம் போற்றுதல், மறை நீர் விழிப்புணர்வு ஆகிய பதாகைகளுடன் விழிப்புணர்வு சங்கிலி உருவாக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.