பெண் காவலர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி சென்னை முதல் கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி பயணம் செய்யும் பெண் காவலர்களுக்கு திருச்சி மாவட்டம் சார்பில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் பேரணியை வரவேற்று பாராட்டு விழா நடைபெற்றது.
கடந்த 1973 ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்தனர்.இந்நிலையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்தையொட்டி தமிழக காவல்துறை சார்பில் இதை பொன்விழா ஆண்டாக கொண்டாடி வருகின்றனர். இந்த விழாவின் முக்கிய சிறப்ம்சமாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை பெண் காவலர்கள் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பேரணி சென்னையில் இருந்து காஞ்சிபுரம்,திண்டிவனம், விழுப்புரம், பெரம்பலூர் திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக வருகின்ற 28 ந்தேதி கன்னியாகுமரி சென்றடைகிறது. இந்நிலையில் இன்று திருச்சி மாவட்டத்திற்கு வந்தடைந்த சைக்கிள் பேரணி பயணம் செய்யும் பெண் காவலர்களை பாராட்டும் விதமாக சமயபுரம் சுங்கச்சாவடியில் திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தலைமையில் வரவேற்பு அளித்து சைக்கிள் பேரணியில் கலந்து பெண் காவலர்களுடன் சைக்கிள் ஓட்டிச் சென்றார் .இதனைத் தொடர்ந்து தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் லால்குடி உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவலர்கள் சீனிவாச பல்கலைக்கழக பேராசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.