பாஜக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு முன்னாள் ராணுவ வீரர் வெறிச்செயல்….
திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த தண்டபாணி ( வயது 45) இவர் பாஜக மாவட்ட பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கோபாலகிருஷ்ணன் என்பவருக்கும் முன்விரோதம் உள்ள நிலையில் கோபாலகிருஷ்ணன் இன்று காலை தண்டபாணியை அரிவாளால் வெட்டியதில் தலைப்பகுதியில் பலத்த காயமடைந்த தண்டபாணி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.