பைக் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு

0 294
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே ச.கண்ணனூர் பேரூராட்சி இந்திரா காலனி, சத்யா தெருவைச் சேர்ந்தவர் மல்லன்(70). இவர் தற்பொழுது கரியமாணிக்கம் சாலையில் உள்ள போக்குவரத்து காலனியில் வசித்து வருகிறார்.நேற்றிரவு சமயபுரம் சுங்கச்சாவடியில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக தனது  பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கரியமாணிக்கம் பிரிவு சாலையை கடக்க முயன்ற போது சென்னை அண்ணா நகர் விரிவாக்கம் இமயம் காலனி மூன்றாவது தெருவை சேர்ந்த  விஜய் மனோகரன் (43) ஓட்டி வந்த கார் சென்னையை நோக்கி சென்ற போது எதிர்பாராதமாக  பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மல்லன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

பின்னர் இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் .

Leave A Reply

Your email address will not be published.