வாழை சாகுபடியில் புரட்சி செய்த விவசாயி

0 497
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் , லால்குடி அருகே பம்பரம்சுற்றி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சை. பட்டதாரி ஆசிரியரான இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.விவசாயத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் தனது ஓய்வு காலத்தில் தனக்கு சொந்தமான நிலத்தில் வாழை சாகுபடி செய்து வருகின்றார்.நடப்பு பசலி ஆண்டில் தமது விவசாய நிலத்தில் உதயா கற்பூரவள்ளி என்கின்ற வாழை ரகம் பயிரிட்டு விவசாயம் செய்து வந்தார். இவரது வாழை சாகுபடியில் 6 அடி உயரமுள்ள வாழைத்தார் ஈன்றுள்ளது. இத்தகவலை அறிந்த அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வந்து வாழைத்தாரை பார்த்து செல்கின்றனர். ஓய்வு பெற்ற முதுகலை ஆசிரியரும் விவசாயியுமான பிச்சை லால்குடி தென்றல் கூட்டுறவு பண்ணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் குழுத்தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் அந்நிறுவனத்தின் இயக்குநர் பாலமுருகன் .
பிச்சை அவர்களை பாராட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.