குறிஞ்சி நகர் செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா – கவுன்சிலர் ந.செந்தில் தலைமையில் நடைபெற்றது..!

0 704
Stalin trichy visit

ஏப்ரல்.11, திருச்சி மாவட்டம், தெற்கு காட்டூர் அருகே உள்ள, குறிஞ்சி நகரில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா கடந்த 8ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. முதலில் கணபதி ஹோமம். மகா பூர்ணாஹூதி என்று தொடர்ந்து திங்கட்கிழமை காலை சாலையில் இருந்து கடம் புறப்பட்டு ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலை வலம் வந்து கோபுரம் அடைந்தது.

இதனைத்தொடர்ந்து, திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் 27 வது குரு மகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி, தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் ஆசியுடன் 18 அருமை காலை குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்ய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தருமை ஆதீன தென்மண்டல கட்டளை ஸ்ரீமத் தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து செல்ல விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கௌரவ தலைவர் 43 வது வார்டு கவுன்சிலர் வழக்கறிஞர் ந.செந்தில் தலைமையில் விழா கமிட்டியினர், குறிஞ்சி நகர் நற்பணி மன்றத்தினர், மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். பின், இக்கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.