கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முன்னேற்றம் : அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தகவல்

0 249
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் தொடங்கியது.நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு , பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.இக்கூட்டத்தில் கொரோனா ஊரடங்கு கால முதல் தவணை நிவாரண உதவித் தொகை 2000 யை திருச்சி மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அமைச்சர்கள் வழங்கினார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் திவ்யதர்ஷினி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 1226 நியாயவிலை கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 8 லட்சத்து 7 ஆயிரத்து 165 குடும்ப அட்டைதாரர்களுக்கு, மொத்தம் 161.43 கோடி மதிப்புள்ள நிவாரண தொகை நாளை முதல் வழங்கப்படஉள்ளது.திருச்சி திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் ஆக்சிசன் உற்பத்திக்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்படும்.ஊரடங்கு காலத்தில் மக்கள் பாதிக்கப்படாமல் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முயற்சித்துவருகிறோம் என்றார்நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருபெல் நிறுவனத்தில் 1980 ஆம் ஆண்டு தொடங்கி 2016 ஆம் வரை ஆக்சிசன் உற்பத்தி நடந்துவந்தது. இதற்கான கருவிகள் பழமை வாய்ந்தது. இதன் உதிரி பாகங்களை பெறுவதில் சிரமம் உள்ளது. எனவே ஆக்சிசன் உற்பத்திக்கான புதிய வாய்ப்புகள் என்ன இருக்கிறது என்பது குறித்து அதிகாரிகளிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்போம் என்றார்-பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

 

Leave A Reply

Your email address will not be published.