பேருந்தில் ஏறிய பெண்ணிடம் 7 பவுன் நகை திருட்டு

0 291
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த விஸ்வாம்பாள் சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கப்பொண்ணு (65) இவர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு இன்று மாலை துறையூர் பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளார் பேருந்து நிலையத்திலிருந்து , தனது ஊருக்கு செல்வதற்காக B.மேட்டூர் செல்லும் அரசு பேருந்தில் ஏற முயற்சி செய்யும்போது கூட்டம் நெரிசலைப் பயன்படுத்தி மர்ம நபர் தங்க பொண்ணு கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றுள்ளான். பேருந்தின் உள்ளே சென்ற பின்பு தான் தனது கழுத்தில் அணிந்து இருந்த நகை திருடு போனது தெரிய வந்தது இது பற்றி பேருந்தில் இருந்த சக பயணிகளிடம் தெரிவித்த போது பேருந்து அக்கம் பக்கத்தினர் பேருந்தை பயணிகளுடன் துறையூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரிக்க வலியுறுத்தினர். அரசு பேருந்து ஓட்டுனர் பயணிகளின் கோரிக்கையை ஏற்று பேருந்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார். காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீசார் பயணிகளிடமும் நகையைப் பறிகொடுத்த மூதாட்டி தங்க பொண்ணு என்பவரிடமும் விசாரணை நடத்தினர்.. சம்பந்தப்பட்ட மர்ம நபர் யார் என தெரியவில்லை எனவும் இது பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவதாகவும் போலீசார் தெரிவித்தனர். பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் காவலர்களை அமர்த்தி பாதுகாப்பு பணியை துரிதப்படுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பட்டப் பகலில் மூதாட்டி கழுத்தில் அணிந்த தங்க நகை திருடு போனது பேருந்து நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.