வீடு புகுந்து பணத்தை திருடியவர் காவல்துறையில் ஒப்படைப்பு

0 248
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அய்யம்பாளையத்தில் வீட்டைத் திறந்து பணத்தை திருடிய பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்..

மண்ணச்சநல்லூர் அருகே அய்யம்பாளையம் கடைவீதி பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரநாதன். இவருடைய மனைவி சுலோச்சனா.இன்று காலை வீட்டை பூட்டிவிட்டு சாவியை ஓட்டின் மேல் பகுதியில் வைத்து விட்டு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு வந்த பெண் வீட்டை திறந்து வீட்டில் இருந்த ரூ. 5250 பணத்தை திருடிச் சென்றுள்ளார். இதை கவனித்த அக்கம்பாக்கம் பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்து நாலு தர்ம அடி போட்டு விசாரணை செய்தனர். அப்போது முன்னுக்கு பின் முரனாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசாரிடம் பெண்ணை ஒப்படைத்தனர். அவரை பிடித்து விசாரணை செய்ததில் லால்குடி அருகே அரியூர் கிழக்கு தெருவை சேர்ந்த ரங்கராஜ் மனைவி 32 வயதான மேனகா காந்தி என தெரியவந்தது.பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த மண்ணச்சநல்லூர் போலீசார் அவரை கைது செய்து திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 3 ல் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.