சாலையில் கவிழ்ந்த லாரி

0 361
Stalin trichy visit

 

திருச்சி மாவடம் மண்ணச்சநல்லூர் அருகே கிளியநல்லூரில் உள்ள திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் முட்டைகோஸ் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இருந்து சாலையில் தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்.

ஓசூர் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அப்பாசாமி. இவரது மகன் 23 வயதான தீனா. இவர் ஓசூரில் இருந்து அசோக் லைலாண்ட் லாரியில் முட்டைகோஸ் ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது கிளியநல்லூரில் உள்ள திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது புறம் லாரி தலைக்கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் காயமின்றி அதிர்ஷ்டசமாக உயிர்த்தப்பினார். இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.