திருச்சி கோட்டை பகுதிக்கு உட்பட்ட பாபு ரோடு பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் உள்ள ஏசியின் கம்பரசரை ஒரு இளைஞர் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்ப முயன்று உள்ளார். அதை அதே பகுதியில் உள்ள செல்வராஜ் என்பவர் பார்த்து கையும் களவுமாக பிடித்து கேட்டபோது அந்த கம்ப்ரசரை அங்கேயே போட்டுவிட்டு தப்ப முயன்று உள்ளார்.
இதுகுறித்து அந்த தனியார் மருத்துவமனை ஊழியர் சிவகுமார்(48) என்பவர் கொடுத்த புகாரின் மீது கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து ஏசி மிசினின் கம்ப்ரசரை திருடிய தாரநல்லூர் அலங்கநாதபுரம் 2-வது தெருவை சேர்ந்த வெங்கடேசன்(39) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த ஏசி கம்ப்ரசர் மிஷினை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.