நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

0 539
Stalin trichy visit

திருச்சி, கிராப்பட்டி பாலம், சர்வீஸ் சாலை பகுதியில் வீடுகள் மற்றும் கடைகள் 8 அடிக்கு மேல் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது. நெடுஞ்சாலைத் துறை சார்பாக எச்சரிக்கை கடிதங்கள் ஏற்கனவே அவர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை சார்பாக உதவி கோட்ட பொறியாளர் ரவிக்குமார் தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டது. எந்திரத்தின் உதவியுடன் 5 கடைகளும் 2 வீடுகளும் அகற்றப்பட்டது. இந்த பணியில் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் வீரமணி, சாலை ஆய்வாளர் பரமசிவம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் ஈடுபட்டனர் மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.