வருகிற 5ந் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்

0 475
Stalin trichy visit

திருச்சியில் அகில இந்திய இந்து மகாசபா அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அகில இந்திய இந்து மகாசபா தலைமை அலுவலகம் அருகில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் உருவச் சிலை வைத்து வழிபடுவது. விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட விடாமல் இந்துக்கள் மனதை புண்படுத்தும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வது. மேலும், விநாயகர் சதூர்த்தி விழாவை கொண்டாட அனுமதிக்காவிட்டால், திருச்சியில் அகில இந்திய இந்து மகாசபா சார்பில் தமிழக அரசை கண்டித்து பதாகைகளுடன் வருகிற 5ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டது.

திருச்சி மேலப்புதூரில் தமிழக அரசு அறிவித்த கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி ஆயர் பதவியேற்பு விழா நடந்தது. போலீசும் பாதுகாப்பு அளித்தது. எனவே, தமிழக அரசு உடனடியாக விநாயகர் சதுர்த்தி விழாவை தமிழகத்தில் வெகு விமர்சையாக கொண்டாட அனுமதி அளிக்க வேண்டும் என்பன போன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.