மணப்பாறையில் அரசு பள்ளி ஆசிரியை கைது
திருச்சி மாவட்டம், மணப்பாறை, பாரதியார் நகரை சேர்ந்தவர் தேன்மொழி (51). இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள ராஜாளிபட்டியில் அரசு தொடக்கப்பள்ளி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது உறவினருக்கு வீடு கட்ட விராலிமலை அருகே முல்லையூரை சேர்ந்த சேசுராஜ் (35) என்ற பொறியாளரை அழைத்து அதற்கான பணியை கொடுத்துள்ளார். இதில் ஏற்பட்ட பிரச்சினையில் தேன்மொழி அவரது கணவர் வீரபாண்டி உள்ளிட்ட 4 பேர் பொறியாளரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து தேன்மொழியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள வீரபாண்டி உள்ளிட்ட மூவரை தேடிவருகின்றனர்.