துறையூர் காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை!!
செல்லிபாளையத்தில் மகாத்மா தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக பணிபுரிந்து வருபவர் சதீஷ்குமார் மனைவி தவமணி இவர் வழக்கம் போல் நேற்று செல்லிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சல்லகுட்டை என்ற இடத்தில் 100 நாள் பணியாளர்கள்ளைகொண்டு பணிதல பொறுப்பாளர் தவமணி வேலை செய்து கொண்டிருதார் அப்பொழுது சம்பவ இடத்திற்கு வந்த மருவத்தூரை சேர்ந்த சங்கர் என்பவர் தகாத வார்த்தையில் பேசி தவமணி தலைமுடியை இழுத்து மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்த முயன்றுள்ளார் அப்பொழுது அங்கு பணியில் இருந்த பணியாளர்கள் தடுத்து சங்கரை மடக்கி பிடிக்கும்போது அவர் தப்பித்து ஓடிவிட்டார் இது தொடர்பாக இன்று துறையூர் போலீஸ் நிலையத்தில் செல்லிபாளையத்தை சேர்ந்த 100 நாள் பணியாளர்கள் சுமார் 150 பேர் காவல் நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அரவிந்தன் மற்றும் செல்லிபாளையம் பணிதள் பொறுப்பாளர் தவமணிக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் மேலும் தாக்க வந்த சங்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் காவல்துறை பாதுகாப்பு அளிப்பதாகவும் சங்கர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியது தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர் இதனால் திருச்சி ரோட்டில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது