இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை

0 236
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நெருஞ்சலக்குடி ஊராட்சியில் திருமணத்தில் விருப்பமில்லாத இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

லால்குடி அருகே நெருஞ்சலக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள்அன்பரசி(27). இவர் பிசியோதெரபி படித்துவிட்டு திருச்சியில் உள்ள தனியார் பிசியோதெரபி மையத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு பெற்றோர்கள் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளனர். ஆனால் திருமணத்தில் அன்பரசிக்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. திருமணத்திற்கு செய்து கொள்ள மறுத்துள்ளார். அவரது பெற்றோர்கள் திட்டியதாக கூறப்படுகிறது.இதனால் மனமுடைந்த இளம்பெண் கடந்த 29-ம் தேதி விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

Leave A Reply

Your email address will not be published.