பைக்கை திருடியவர் கைது
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் பகுதியில் மோட்டார் பைக்கை திருடிச் சென்றவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நம்பர் ஒன் டோல்கேட் திருவள்ளுவர் அவென்யூ சீனிவாசா குடியிருப்பில் வசிப்பவ ரவிச்சந்திரன்(57) . இவர் கடந்த 29-ம் தேதி இரவு தனது ராயல் என்பீல்டு மோட்டார் பைக்கை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார். பின்னர் மறுநாள் காலையில் பார்த்தபோது மோட்டார் பைக் மாயமாகியிருந்தது.மர்ம நபர் மோட்டார் பைக்கை திருடிச் சென்றனர். இதுகுறித்து ரவிச்சந்திரன் கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் மோட்டார் பைக்கை திருடிச் சென்ற நபர் குறித்து விசாரணை செய்து தேடி வந்தனர். தேடுதல் வேட்டையில் பிச்சாண்டார் கோயில் பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த 25 வயதான ராஜேஷ் மோட்டார் பைக்கை திருடிச் சென்றது தெரியவந்தது. பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த கொள்ளிடம் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் திருடி சென்ற ராயல் என்பீல்டு மோட்டார் பைக்கை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.