ஸ்ரீரங்கம் கோயில் கோபுரத்தின் முகப்பு பகுதி திடீரென இடிந்து விழுந்தது
ஸ்ரீரங்கம் கோயில் கோபுரத்தின் முகப்பு பகுதி திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு.
திருச்சி, ஆக.5 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு இந்தியா மட்டுமல்லாது பல்வேறு வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளன. இதில் தற்போது நாம் தரிசனம் செய்யும் ராஜகோபுரம் 236 அடி உயரம் கொண்டது. தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 21 கோபுரங்களில் மற்றவை வண்ணமயமாய் காட்சி அளிக்க, ஒன்று மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கும்
திருச்சி ஸ்ரீரங்கம் கீழவாசலில் உள்ள நுழைவுவாயில் கோவில் கோபுரத்தில் இரண்டு நிலைகளில் மேற்கூரை பூச்சுகள் இடிந்து விழும் நிலையில் இருந்தது.
இந்நிலையில் முதல் நிலையில் உள்ள கோபுரத்தின் முகப்பு பகுதி இன்று விடியற்காலை திடீரென இடிந்து விழுந்து.
கிழக்கு வாசலில் நுழைவு கோபுரத்தின் முதல் நிலை மற்றும் 2வது நிலை சுவர்கள், சில தினங்களாக விரிசல் ஏற்பட்டு இருந்தன விரிசல் அதிகமான நிலையில் முதல் நிலை கோபுரத்தின் சுவர், மளமளவென இடிந்து விழுந்தது. தற்போது இடிந்து விழுந்த கோவில் முகப்பு பகுதியை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தால் பெரிய அளவில் சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.