ஹவுரா ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்

0 260
Stalin trichy visit

 

திருச்சி, அ. 18 திருச்சி ரயில் நிலையம் 3வது நடைமேடையில் நேற்று சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் கருப்பு நிற தோள் பையுடன் நின்றிருந்தார். அங்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் அவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனையிட்டனர். இதில் 8 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் ஓடிசா மாநிலத்தை சேர்ந்த பரிகித் மாலிக் (25) என்பதும், 3 ஆண்டுகள் திருப்பூரில் வேலை செய்ததாகவும், பணக் கஷ்டம் காரணமாக கஞ்சாவை கடத்தி வந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து போதை பொருள் தடுப்பு போலீசார்  அவரை கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.