தாய், மகனை அடித்து கொலை செய்த கொலையாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை
திருச்சி, டிச. 1 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கடந்த 2017 ம் ஆண்டு தாய், மகனை அடித்து இரட்டைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனையும் ரூ.13,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
புள்ளம்பாடி அருகே வெங்கடாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் தனது மனைவி தனபாபு மற்றும் மகன் சத்தியமூர்த்தி ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் அதே ஊரில் வசித்து வந்த தனபாபுவின் அண்ணன் ராமசாமி பஞ்சாயத்து தலைவராக இருக்கும் போது தேர்தல் செலவுக்காக தனபாபு ஒரு லட்சம் பணம் வெளியில் கடன் வாங்கி கொடுத்துள்ளார். அதன் பின்னர் இரண்டரை வருடங்களுக்கு முன்பு ராமசாமி இறந்து விட்டார்.
இந்நிலையில் தனபாபு மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோர் ராமசாமி மகன் ராஜகோபால் என்பவரிடம் கொடுத்த பணத்தைக் கேட்டபோது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு முன் விரோதமாக இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2017 ம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி அதிகாலை சுமார் 3.30 மணிக்கு ராஜகோபால் சத்தியமூர்த்தி வீட்டுக்கு சென்று கனமான ஆயுதத்தால் தூங்கிக் கொண்டிருந்த தனபாபு மற்றும் சத்தியமூர்த்தி தலையில் அடித்து கொலை செய்து பின்பு அவர்களை வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்து வீட்டு வாசலில் உள்ள மண் ரோட்டில் போட்டுவிட்டு தனது டாக்டரை அவர்கள் மீது ஏற்றி விபத்தில் இறந்ததாக ஜோர்டனை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார்.
இச்சம்பவம் குறித்து கல்லக்குடி போலீசார் நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.பின்னர் இந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி செல்வமுத்துக்குமாரி தீர்ப்பளித்தார். அதில் தாயும் மகன் என இரட்டைக் கொலை செய்த குற்றவாளி ராஜகோபாலுக்கு இரண்டு ஆயுல் சிறை தண்டனையும் ரூ. 13000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சக்திவேல் ஆஜராகி வாதாடினார்.