பணம் வைத்து சூதாடியவர்களுக்கு போலீசார் வலைவீச்சு

0 300
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள எம்.இடையப்பட்டி என்ற கிராமத்தில் பணம் வைத்து சூதாடியதாக திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.க்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடியவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் தப்பியோடிவிட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு மொபட் மற்றும் அங்கு சூதாட பயன்படுத்திய பொருட்களையும் பறிமுதல் செய்து தலைமறைவானவர்களை துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.