துவரங்குறிச்சி சிவாலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சனிபிரதோஷ ஆராதனைகள்!
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் சிவாலயம் உள்ளது. இக்கோயில் மாதமாதம் பிரதோஷங்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன , இவ்வாறு நடைபெறும் பிரதோஷ விழாவில் இப்பகுதி சுற்றியுள்ள பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து வருகின்றனர். அத்துடன் இன்று புரட்டாசி முதல் சனியான இன்று மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயமான துவரங்குறிச்சியில் உள்ள இக்கோயிலில் புரட்டாசி முதல் சனியான இன்று சனி பிரதோஷம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இப்பிரதோஷ பாலாபிஷேகம், நெய்யபிஷேகம், தயிர் அபிஷேகம், புனித நீராலும், இளநீராலும், பண்ணீராலும், தீபாரதனை ஆகியவைகளை கொண்டு கெட்டி மேளத்துடன் சனி பிரதோஷ ஆரதனைகள் நடைபெற்றது. இந்நாளில் சுற்றியுள்ள அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
