ரூ.3.75 கோடியை பறிகொடுத்த சிவகாசி ஜெயலட்சுமி எல்ஃபின் நிதி நிறுவனத்தின் முன்பு போராட்டம்

0 748
Stalin trichy visit

சென்னையை தலைமையிடமாக கொண்டு திருச்சி மன்னார் புரத்தில் எல்பின் என்ற நிதி நிறுவனம் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பலரும் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். முதலீடு செய்யப்படும் பணம் பத்தே மாதத்தில் இரட்டிப்பாக தரப்படும் என அந்நிறுவனம் ஆசைவார்த்தை கூறியதன் அடிப்படையில் நாள்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் இந்நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டது.

 

இந்த நிலையில் முதலீட்டாளர்களுக்கு அந்நிறுவனம் பணத்தை திருப்பித் தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் முதலீடு செய்த பொதுமக்கள் பலரும் அந்நிறுவனத்திற்கு படையெடுத்து வந்த வண்ணம் இருந்தனர்.
இந்தநிலையில் கொரோனாவை காரணம் காட்டி அந்நிறுவனம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பூட்டப்பட்டது.மூன்று மாத காலத்திற்குள் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பணம் திருப்பித் தரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது . ஆனாலும் அந்த வாக்குறுதி அடிப்படையில் பணம் தரப்பட வில்லை.இந்தசூழலில் கடந்த 2004 2005ஆம் ஆண்டு வாக்கில் பரபரப்பாக பேசப்பட்ட போலீஸ் புகழ் சிவகாசி ஜெயலட்சுமி நிறுவனத்தில் ரூ 3.75 கோடி முதலீடு செய்திருப்பதாகவும் இதுநாள் வரை ஒரு பைசா திருப்பித் தரப்படவில்லை என குற்றம்சாட்டி மன்னார்புரம் எல்பின் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.அவரிடம் கண்டோன்மெண்ட் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆயினும் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில் தற்போது அவர் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார். தான் முதலீடு செய்த பணம் தன் கைக்கு திரும்ப வரும் வரை போராட்டத்தை விடப்போவதில்லை எனக் கூறி  ELfiN வாசலிலேயே அமர்ந்திருக்கிறார். நேற்று இரவு 11 மணி முதல் இந்த இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.