ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை போதையில் இருந்த 4 பேர் கொள்ளிடம் கரையோரம் உள்ள முட்புதற்குள் மறைவான இடத்திற்கு அழைத்து சென்றனர். இதனை கண்ட பொதுமக்கள் அங்கு சென்றுள்ளனர். பொதுமக்கள் வருவதை கண்ட 4 பேரும் அந்த பெண்ணை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
அவரை பத்திரமாக மீட்ட பொதுமக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த ஸ்ரீரங்கம் போலீசார் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்தில் மர்ம நபர்களை தேடினர். ஆனால் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.