தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
திருச்சி ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஜஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் ஆய்வகங்கள் மற்றும் மாணவ மாணவிகள் பயன்படுத்தக் கூடிய கழிப்பறைகளை பார்வையிட்டார். நடப்பு கல்வியாண்டிற்காக பாட புத்தகங்களையும் வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…. ஜூலை 31-ஆம் தேதிக்குள் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டு உள்ளதால் அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பன்னிரண்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் 30 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தேர்வானது நடைபெறும். தற்போது 12ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் குறைவாக இருந்தால் கூட அந்த தனித்தேர்வுகளிலும் மாணவர்கள் எழுதலாம். இது கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தால் சாத்தியம். இல்லையென்றால் அந்த நேரத்தில் அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுக்கிறதோ அதன்படி செயல்படும்.
தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலைமையை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆசிரியராக இருந்தவர்கள் பேக்கரிகளிலும், பெயிண்ட்ராக வேலை செய்யும் வீடியோ பதிவையும் எனக்கு அனுப்பி வருகின்றனர். மிகவும் வருத்தமாக இருக்கிறது. நிச்சயமாக தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு முதல்வரிடம் இது குறித்து பேச உள்ளேன். எந்த காலகட்டத்திலும் நீட் தேர்வு தமிழகத்தில் நுழைய விடமாட்டோம். அதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருவோம்” என்றார்
மேலும் இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மாவட்ட கல்வி அதிகாரிகள், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகியோர் உடன் உள்ளனர்